மீன்வளப் புள்ளி விவரம் குறித்த கையேடு - 2018 ஆனது இந்திய அரசின் மத்திய மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறையால் வெளியிடப் பட்டுள்ளது.
இது குறித்த கையேடானது (12வது பதிப்பு) கடைசியாக 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா விளங்குகின்றது.
மீன் வளர்ப்பு உற்பத்தியிலும் உள்நாட்டு மீன் பிடிப்புத் தொழிலிலும் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகின்றது.
உள்நாட்டு மீன்களின் அதிக அளவிலான உற்பத்தியானது (34.50 லட்சம் டன்) ஆந்திராவில் பதிவாகியுள்ளது.
நாட்டின் கடல் மீன்களின் உற்பத்தியில் (7.01 லட்சம் டன்) குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளது.