பைனான்சியல் டைம்ஸ் இதழின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீனா அணுசக்தி திறன் கொண்ட ஒரு மீயொலி வேக ஏவுகணையைச் சோதனை செய்தது.
இந்தப் பரிசோதனையைச் சீனா இரகசியமாக மேற்கொண்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த ஏவுகணையானது அதன் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு முன்பாக உலகினைச் சுற்றி வந்தது.
இருப்பினும் அது சுமார் 24 மைல்கள் தொலைவில் தனது இலக்கைத் தவற விட்டது.
மீயொலி வேக ஆயுதங்களில் சீனா வியக்கத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளதை இது நிரூபிக்கிறது.
இந்தச் சோதனையானது அமெரிக்காவின் சோதனையை விட மேம்பட்டதாகும்.
இந்த ஆயுதமானது கோட்பாட்டின்படி தென்துருவத்தின் மேல்பகுதியில் பறக்க வல்லது என அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க இராணுவத்தின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலும் வட துருவப் பாதையில் மட்டுமே கவனம் செலுத்துவதால் இந்த ஏவுகணையானது அதற்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.