May 12 , 2019
                                                                          2368 days 
                                      1029
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பு உருவாக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளனர்.
 
 	- இவர்கள் சில விண்மீன்கள் வெடிப்பதற்கு விரைவான நியூட்ரினோ அலைவுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
 
 	- விண்மீன் வெடிப்பானது மீயோளிர் விண்மீன் வெடிப்பாக வெளிப்படுகின்றது.
இது விண்வெளியில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பாகும்.
 
விரைவான நியூட்ரினோ அலைவுகள்
 	- எலக்ட்ரான் நியூட்ரினோ, மியான் நியூட்ரினோ மற்றும் தவ் நியூட்ரினோ ஆகியவை 3 வகையான நியூட்ரினோக்களாகும்.
 
 	- நியூட்ரினோக்கள் குறைவான நிறையைக் கொண்டுள்ளன. இவை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் தன்மை கொண்டது. இது நியூட்ரினோ அலைவுகள் என்று அழைக்கப்படுகின்றது.
 
 	- பல்வேறு வகையான நியூட்ரான்கள் வெவ்வேறு திசைகளில் உமிழப்படும் போது விரைவான நியூட்ரான் அலைவுகள் ஏற்படுகின்றன.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                1029