உச்ச நீதிமன்றம் ஆனது இந்திய அரசியலமைப்பின்படி நிலம் கையகப்படுத்துதலுக்கு நியாயமான இழப்பீட்டையே உத்தரவாதம் செய்கிறது, ஆனால் அது சட்டம் அல்லது குறிப்பிட்ட கொள்கைகளில் வழங்கப் பட்டுள்ளவற்றிற்கு அப்பாற்பட்ட வகையிலான மீள் குடியேற்றத்தினை அல்ல என்று கூறியது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளில் 21வது சரத்தின் (வாழ்க்கை மற்றும் வாழ்வாதார உரிமை) நோக்கம் குறித்த இது ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பாகும்.
அத்தகைய மீள் குடியேற்றம் ஆனது ஒரு கொள்கையின் கீழ் மிக வெளிப்படையாக வழங்கப் படாவிட்டால், வெளியாட்களுக்கு மாற்று நிலம் அல்லது அவர்களுக்கு வீட்டு வசதி வழங்குவது ஒரு மாநிலச் சட்டப்பூர்வ கடமையின் கீழ் வராது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
எந்தவொரு பொது நோக்கத்திற்காகவும் என்று நிலம் கையகப் படுத்தப்படும் போது, யாருடைய நிலம் பறிக்கப்படுகிறதோ, அந்த நபருக்குச் சட்டத்தின் தீர்மானிக்கப்பட்ட கொள்கைகளின்படி பொருத்தமான இழப்பீடு பெற உரிமை உண்டு.
வழக்கின் பெயர் வீட்டுமனை விற்பனை அதிகாரி ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மற்றும் நிர்மலா தேவி இடையிலான வழக்கு ஆகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் நர்மதா பச்சாவ் அந்தோலன் (2011) மற்றும் அமர்ஜித் சிங் மற்றும் பஞ்சாப் மாநில அரசு (2010) உள்ளிட்ட முந்தையத் தீர்ப்புகளை குறிப்பிட்டுக் காட்டி, மீள் குடியேற்றம் என்பது அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமை அல்ல என்று அமர்வு வலியுறுத்தியது.