முக அங்கீகார அமைப்புடன் கூடிய முதலாவது விமான நிலையம்
July 4 , 2019 2241 days 722 0
ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமானது பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழையும் போது சோதனை செய்வதற்காக முக அங்கீகார அமைப்பைச் சோதனை முறையில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த சோதனைத் திட்டமானது மத்திய அரசின் டிஜி யாத்திரைத் திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்படுகின்றது.
டிஜி யாத்திரை என்பது பல்வேறு இடங்களில் அடையாளத்திற்கான சோதனையைத் தவிர்க்கவும் காகிதமற்ப்ற பயணத்திற்கு உதவுவதற்காகவும் உள்ள ஒரு வசதியாகும்.