முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் ஒலிம்பிக்ஸ்
August 8 , 2018 2634 days 891 0
அனைத்து அரங்குகளையும் சுற்றி பாதுகாப்பை அதிகரிப்பதற்காக முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் 2020-ல் நடைபெறவிருக்கிறது.
இதற்காக, ஒலிம்பிக் போட்டிகளில் செயல்படுத்தப்படும் இந்த வகையான முதலாவது அமைப்பை மேம்படுத்த விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஜப்பானின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு முன்னணி நிறுவனமான NEC உடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
உலகத்தில் உள்ள மற்ற அமைப்புகளுடன் ஒப்பிடும் போது இத்தொழில்நுட்பம் ஆனது முன்பே பதிவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் முகத்தை3 வினாடிகளில் பொருத்தி தெளிவுபடுத்தி விடும். இது மற்ற அமைப்புகளை விட வேகமான அமைப்பு ஆகும்.