TNPSC Thervupettagam

முகவர் ஒழுங்குமுறை (திருத்தம்) மசோதா

August 2 , 2021 1474 days 700 0
  • வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு முகவர் சேவையை வழங்குவதற்கான மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்து, சுமூகமான மூலதனச் சுழற்சியையும் நல்லமுறையான பணப் புழக்கத்தினையும் உறுதி செய்வதில் அந்த நிறுவனங்களுக்கு உதவும்.
  • தற்போதுள்ள முகவர் ஒழுங்குமுறைச் சட்டமானது 2011 ஆம் ஆண்டில் இயற்றப் பட்டது.
  • இது ஒரு வங்கி அல்லாத நிதியியல் நிறுவனமானது முகவர் வணிகத்தினை ஒரு முதன்மை வணிகமாகக் கொண்டிருந்தால் மட்டுமே இந்த வேலையைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்துள்ளது.
  • அதாவது அந்த நிறுவனத்தின் பாதிக்கும் மேலான சொத்துகள் பயன்படுத்தப்பட்டு முகவர் வணிகத்தின் மூலம் வருவாய் ஈட்டப்பட வேண்டும்.
  • இந்த மசோதாவில் இந்த வரம்பானது நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்