TNPSC Thervupettagam

முக்கிய கனிம அந்தஸ்து – கற்கரி

February 2 , 2026 16 days 70 0
  • இந்திய அரசானது, 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (MMDR சட்டம்) கீழ், கற்கரியை (Coking Coal) ஒரு முக்கிய மற்றும் மூலோபாய கனிமமாக அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பானது கற்கரியை முதல் அட்டவணையின் பகுதி D-யில் சேர்ப்பதன் மூலம், சுரங்கத் தொழில் மற்றும் மேம்பாட்டிற்கு அதற்கு உயர் முன்னுரிமையை வழங்குகிறது.
  • எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கற்கரிக்கான இந்தியாவின் 95% இறக்குமதி சார்பைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
  • கற்கரியானது உலோகவியல் நிலக்கரி என்றும் அழைக்கப்படுகிறது எனவே இது எஃகு தயாரிப்பதற்கு இன்றியமையாதது என்பதோடு அனல் மின் நிலக்கரியால் இதை ஈடு செய்ய முடியாது.
  • இந்த முடிவு, 2030-ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி என்ற தேசிய எஃகு கொள்கையின் இலக்கை ஆதரிக்கிறது.
  • இந்தியாவில் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெருமளவிலான கற்கரி இருப்புக்கள் உள்ளன ஆனால் தரப் பிரச்சினைகள் காரணமாக இந்தியா இறக்குமதியைச் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்