இந்திய அரசானது, 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (MMDR சட்டம்) கீழ், கற்கரியை (Coking Coal) ஒரு முக்கிய மற்றும் மூலோபாய கனிமமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது கற்கரியை முதல் அட்டவணையின் பகுதி D-யில் சேர்ப்பதன் மூலம், சுரங்கத் தொழில் மற்றும் மேம்பாட்டிற்கு அதற்கு உயர் முன்னுரிமையை வழங்குகிறது.
எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கற்கரிக்கான இந்தியாவின் 95% இறக்குமதி சார்பைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
கற்கரியானது உலோகவியல் நிலக்கரி என்றும் அழைக்கப்படுகிறது எனவே இது எஃகு தயாரிப்பதற்கு இன்றியமையாதது என்பதோடுஅனல் மின் நிலக்கரியால் இதை ஈடு செய்ய முடியாது.
இந்த முடிவு, 2030-ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி என்ற தேசிய எஃகு கொள்கையின் இலக்கை ஆதரிக்கிறது.
இந்தியாவில் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெருமளவிலான கற்கரி இருப்புக்கள் உள்ளன ஆனால் தரப் பிரச்சினைகள் காரணமாக இந்தியா இறக்குமதியைச் சார்ந்துள்ளது.