TNPSC Thervupettagam

முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஊக்குவிப்புத் திட்டம்

October 9 , 2025 10 days 35 0
  • 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஊக்குவிப்புத் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை சுரங்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
  • மின்னணுக் கழிவுகளைப் பயன்படுத்தி தீர்ந்து போன லித்தியம்-அயனி மின் கலன்கள் மற்றும் தொழில்துறைக் குப்பைகள் போன்ற இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து முக்கிய கனிமங்களை மறுசுழற்சி செய்யும் இந்தியாவின் திறனை அதிகரிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, மறுசுழற்சி மையங்களை அமைப்பதில் அல்லது விரிவுபடுத்துவதில் புத்தொழில் நிறுவனங்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய மறு சுழற்சி மையங்களை ஆதரிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது, இந்தியாவின் வள செயல்திறன், சுழற்சிப் பொருளாதார மேம்பாடு மற்றும் மூலோபாய கனிமங்கள் மீதான இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல் போன்ற பரந்த இலக்குகளுடன் ஒத்துப் போகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்