TNPSC Thervupettagam

முக்கிய கனிமங்கள் குறித்த G7 பேச்சுவார்த்தைகள்

January 15 , 2026 7 days 80 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஷிங்டனில் நடைபெறும் முக்கிய கனிமங்கள் குறித்த G7 நாடுகளின் நிதியமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அமெரிக்கா இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் அழைத்துள்ளது.
  • பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் தூய்மையான எரிசக்திக்குத் தேவையான முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்காக என்று இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
  • ஏழு நாடுகள் குழுவில் (G7) அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு (UK), ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை அடங்கும்.
  • ஆஸ்திரேலியாவில் அருமண் மற்றும் லித்தியத்தின் பெரிய அளவிலான இருப்புக்கள் உள்ளன என்பதோடு மேலும் அது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனிம ஒத்துழைப்பு குறித்து அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • லித்தியம், கோபால்ட், கிராஃபைட், தாமிரம் மற்றும் அருமண் போன்ற முக்கியமான கனிமங்களின் உலகளாவியச் சுத்திகரிப்பில் சீனா சுமார் 47% முதல் 87% வரையிலான பங்கை கொண்டுள்ளது.
  • சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உலகளாவிய கனிம விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்துவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்