TNPSC Thervupettagam

முக்கிய காரீஃப் பருவப் பயிர்களின் உற்பத்தி குறித்த முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்

September 27 , 2022 1049 days 403 0
  • முக்கிய காரீஃப் பருவப் பயிர்களின் உற்பத்திக்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீடுகள் நாட்டில் 149.92 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று கணித்துள்ளது.
  • இது 2022-23 காரீஃப் பருவத்திற்கான இலக்கான 163.15 மில்லியன் டன் மற்றும் கடந்த காரீஃப் பருவத்தில் (2021) உற்பத்தியான 156.04 மில்லியன் டன் உற்பத்தியை விட குறைவாகும்.
  • கடந்த காரீஃப் பருவத்தில் பதிவான மொத்த காரீஃப் உணவு தானிய உற்பத்தி 150.58 மில்லியன் டன்களாக இருந்தது.
  • அரிசி உற்பத்தியானது 104.99 மில்லியன் டன்களாகப் பதிவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான காரீஃப் பருவ அரிசியின் சராசரி உற்பத்தியை விட இது 4.40 மில்லியன் டன்கள் அதிகமாகும்.
  • இருப்பினும், கடந்தப் பருவத்தில் 111.76 மில்லியன் டன் ஆக பதிவான உற்பத்தியை விட இது 6 சதவீதம் குறைவாகும்.
  • மக்காச்சோள உற்பத்தியானது 23.10 மில்லியன் டன்களை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியானது 23.57 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மொத்தப் பருப்பு உற்பத்தியானது 8.37 மில்லியன் டன்களை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மொத்த கரும்பு உற்பத்தி 465.05 மில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது சராசரி கரும்பு உற்பத்தியான 373.46 மில்லியன் டன்களை விட 91.59 மில்லியன் டன்கள் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்