முக்கிய மந்திரி கிரிஷி ஆசிர்வாத் யோஜனா - ஜார்க்கண்ட்
August 17 , 2019 2183 days 984 0
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஜார்க்கண்டில் முக்கிய மந்திரி கிரிஷி ஆசிர்வாத் யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இது 13.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு ஏக்கர் அல்லது அதற்குக் குறைவாக நிலத்தை வைத்துள்ள விவசாயிகள் ரூ.5000 நிதியைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
5 ஏக்கர் நிலத்தை வைத்துள்ள விவசாயிகள் இரண்டு தவணை முறையில் ரூ.25,000ஐ பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர்.
நேரடிப் பயன் பரிமாற்ற முறையின் மூலம் மாநிலத்தினால் 100 சதவித அளவில் தீர்வையை அளிக்கக் கூடிய வகையில் இருக்குமாறு தொடங்கப்பட்ட முதலாவது திட்டம் இதுவாகும்.