பீகார் மாநில அரசானது அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணாக்கர்களுக்காக இந்தத் திட்டத்தை தொடங்கியது.
இந்தத் திட்டமானது, கலாச்சார விழிப்புணர்வு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவக் கற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் கீழ், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்கள் இந்தியா முழுவதும் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் முக்கிய தளங்களைப் பார்வையிடுவர்.
இந்தத் திட்டம் ஆனது ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கான பீகாருக்குள்ளேயான சுற்றுப் பயணங்களை உள்ளடக்கிய, முந்தைய முக்கிய மந்திரி பீகார் தரிசன யோஜனாவை விரிவுபடுத்துகிறது.