பீகார் மாநில அரசின் முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது பெண்கள் தங்கள் விருப்பப்படி சுயதொழில் முயற்சிகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஆரம்ப மூலதனத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
பீகார் முழுவதும் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா 10,000 ரூபாய் நேரடியாக அனுப்பப்பட்டது.
பின்வரும் அமலாக்கக் கட்டங்களில் 2 லட்சம் ரூபாய் வரையில் கூடுதல் ஆதரவை அவர்கள் பெறுவார்கள்