முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா – பீகார்
September 3 , 2025
19 days
74
- பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் பெண்கள் அதிகாரமளிப்பிற்கான இந்த சிறப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் தொழில் முனைவோரைத் தயார்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- இதில் பீகார் பெண்களுக்கு 10,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை தொகை வழங்கப்படும்.
- இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழான முதல் தவணை 10,000 ரூபாய் ஆனது நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- இது உதவித் தொகை வடிவில் வழங்கப்படும்.
- வேலை தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களின் பணி மதிப்பிடப்படும்.
- அவர்கள் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதில் வெற்றி பெற்றால், அத்தகைய பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக வழங்கப்படும்.
Post Views:
74