2025–26 நிதியாண்டிற்கான உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ந்த காப்பீட்டு நிறுவனங்களாக(D-SII), LIC, GIC Re மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தக்க வைத்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்தியப் பொதுக் காப்பீட்டுக் கழகம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஆகியவை நாட்டின் நிதி நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
அவற்றின் பிரம்மாண்டமான அளவு மற்றும் சந்தை முக்கியத்துவம் காரணமாக இந்த நிறுவனங்கள் "தோல்வியடைய முடியாத அளவுக்குப் பெரியவை" என்று அழைக்கப் படுகின்றன.
இந்த நிறுவனங்களில் ஏதேனும் தோல்வி அடைந்தால் அது ஒட்டு மொத்த நிதி அமைப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
எனவே, இவை கடுமையான விதிமுறைகள், சிறந்த நிர்வாகம் மற்றும் வலுவான இடர் மேலாண்மை நெறிமுறைகளுக்கு உட்பட்டவை.