முக்கியமான கனிமங்களுக்கான மூலதனச் செலவு (Capex) ஆதரவுத் திட்டம்
November 13 , 2026 2 days 51 0
முக்கியமான கனிமங்களின் உள்நாட்டு பதப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக ₹2,814 கோடி மதிப்பிலான மூலதனச் செலவு (Capital Expenditure - Capex) ஆதரவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இறக்குமதி சார்பைக் குறைக்கவும், உள்நாட்டு பதப்படுத்தும் திறனை வலுப்படுத்தவும் இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை செயல்படும்.
இது இரண்டு லித்தியம் ஆலைகள் (தலா குறைந்தபட்சம் 30 கிலோடன்கள்) மற்றும் இரண்டு நிக்கல் ஆலைகள் (தலா குறைந்தபட்சம் 50 கிலோடன்கள்) ஆகிய நான்கு பதப்படுத்தும் ஆலைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
தகுதியான முதலீட்டில் 30% மூலதன மானியமாக வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக ஒரு லித்தியம் பயனாளிக்கு ₹500 கோடியும், ஒரு நிக்கல் பயனாளிக்கு ₹900 கோடியும் வழங்கப்படும்.
நிக்கல் பதப்படுத்தலின் துணைப் பொருளாக கோபால்ட்டும் பிரித்தெடுக்கப்படும்.
மின்சார இயக்கம், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS), மின்னணுவியல், பாதுகாப்பு மற்றும் சிறப்பு எஃகு போன்ற துறைகளுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கிறது.