முடக்கு வாதத்திற்கான சிகிச்சையில் ஆயுர்வேதத்தின் செயல்திறனை மதிப்பிடும் உலகின் முதல் பல்முகமை மருத்துவ பரிசோதனையின் மூன்றாம் கட்டச் சோதனையை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வாத நோய் நிபுணரான டாக்டர் டேனியல் எரிக் ஃபர்ஸ்ட் இந்தச் சோதனையை மேற்பார்வை செய்வார்.
ஆரிய வைத்யா மருந்து நிறுவனத்துடன் (கோயம்புத்தூர்) இணைந்த AVP ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் (CCRAS - Central Council for Research in Ayurveda) ஆகியவை இந்தச் சோதனைகளை மேற்கொள்ளும்.
பெங்களூருவில் உள்ள வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கான மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள AVP ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் மும்பையில் உள்ள ராஜா ராம்தேவ் ஆனந்தி லாலா மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் இந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.