TNPSC Thervupettagam

முதலமைச்சரின் சுகாதாரக் காப்பீட்டுத் தரவு

June 18 , 2025 17 days 63 0
  • கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 81 லட்சத்திற்கும் அதிகமான திட்டப் பயனாளிகள் முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5,878 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச சிகிச்சையைப் பெற்றனர்.
  • அவச ரகால 'இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம்' முன்னெடுப்பு ஆனது 648.12 கோடி ரூபாய் செலவில், விபத்தினால் பாதிக்கப்பட்ட 7.4 லட்சம் நபர்களைக் காத்தது.
  • அரசாங்கமானது சுமார் 54 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சுமார் 31.75 லட்சம் தாய்மார்களுக்கு சுமார் 1,149.24 கோடி ரூபாய்கள் மதிப்பு கொண்டுள்ள ஊட்டச்சத்துத் தொகுப்புகளை விநியோகித்துள்ளது.
  • கிண்டியில் இந்தியாவின் இரண்டாவது தேசிய முதியோர் மையத்திற்காகச் செலவிடப் பட்ட 151 கோடி ரூபாயுடன் சேர்த்து, மாநிலத்தில் 1,046 கோடி ரூபாயில் ஐந்து புதிய மருத்துவமனைகள் நிறுவப்பட்டன.
  • மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆனது, 200 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வீடு தேடி சுகாதாரப் பராமரிப்பை வழங்கியது.
  • பள்ளிகள் வாரியான ஒரு பார்வைத் திறன் ஆய்வுத் திட்டம் மூலம் சுமார் 13.11 லட்சம் குழந்தைகளுக்கு இலவசக் கண்ணாடிகள் வழங்கப் பட்டன.
  • 28 என்ற தேசிய சராசரிக்கு எதிராக, தமிழ்நாடு மாநிலத்தின் குழந்தை உயிரிழப்பு விகிதமானது (IMR) 1,000 பிறப்புகளுக்கு 8 ஆகக் குறைந்துள்ளது.
  • கிராமப்புற மருத்துவம், காசநோய் ஒழிப்பு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட வகையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியதற்காக மாநில அரசு 545 விருதுகளைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்