நடப்பு கேரம் உலக சாம்பியன் M. காசிமா, 2025 ஆம் ஆண்டு முதலமைச்சரின் மாநில இளையோர் விருதை வென்றார்.
2025 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முதலமைச்சரின் மாநில இளையோர் விருது, சமூக மேம்பாட்டிற்கு அவர்கள் ஆற்றிய தன்னார்வப் பங்களிப்புகளுக்காக 15 முதல் 35 வயதுடைய இளையோர்களை அங்கீகரிக்கிறது.
இந்த விருதில் 1,00,000 ரூபாய் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை அடங்கும்.
அரசு ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் இந்த விருதினைப் பெற தகுதி அற்றவர்கள் ஆவர்.