கடற்படை மேலாதிக்கமானது சோழப் பேரரசை அதன் மகிமையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
முதலாம் இராஜேந்திர சோழனின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், சோழக் கடற்படை அதன் அதிகாரத்தின் உச்சத்தை அடைந்தது.
கி.பி 1012 ஆம் ஆண்டில் அவர் அரியணை ஏறினார்
இந்தியாவின் தெற்கு தீபகற்பம் முழுவதும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், சோழர்கள் கடல்களுக்கான ஒரு தடையற்ற அணுகலைக் கொண்டிருந்தனர்.
அதன் மூலம் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான அரசியல் விரிவாக்கத்தின் ஓர் அரங்கமாக மாறினர்.
இராஜேந்திரனின் ஆட்சி சோழர்களின் வெளிநாட்டு ஆட்சி கையகப்படுத்துதல் என்ற இலட்சியத்தின் மிகவும் உறுதியான கட்டத்தைக் குறித்தது.
இந்த காலக் கட்டத்தில் தொடங்கப் பட்ட கடற்படைப் படையெடுப்புகள் இலங்கையை இணைப்பதற்கும், வங்காள விரிகுடா முதல் மலாய் தீபகற்பத்தின் தொலைதூரப் பகுதிகள் வரை ஒரு துணிச்சலானப் படையெடுப்பிற்கும் வழி வகுத்தன.
மலாய் தீபகற்பத்தின் மீதான வெற்றி இராஜேந்திரனுக்கு கடாரம் கொண்டான் (கடாரத்தை வென்றவர்) என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
சோழர்களின் கடற்படையில் பல்வேறு தரங்களின் கீழ் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளின் இருப்பு அவர் ஆட்சியின் வணிக மற்றும் இராணுவச் நோக்கங்களுக்காக சேவை செய்தது.
K. A. நீலகண்ட சாஸ்திரி தனது The Cōlas என்றப் புத்தகத்தில் இராஜேந்திரனின் கடற் படைப் படையெடுப்புகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கினார்.
இது குறிப்பாக ஈழ மண்டலம் (இலங்கை) மற்றும் ஸ்ரீவிஜய இராட்சியத்தின் மூலோபாயக் கோட்டையான கடாரத்தைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டது.
கி.பி 1017 ஆம் ஆண்டில், இராஜேந்திரன் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்க்கமான படையெடுப்பைத் தொடங்கினார்.
அது அவரது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு காலமாகும்.
மேலும் இது அவரது தந்தை முதலாம் இராஜராஜ சோழனால் தொடங்கப்பட்ட முயற்சிகளின் உச்சக் கட்டத்தைக் குறித்தது.
சோழர்களின் வெற்றி சிங்கள ஆட்சியாளர் ஐந்தாம் மஹிந்தாவின் முப்பத்தி ஆறு ஆண்டு கால ஆட்சியின் முடிவோடு ஒத்துப் போனது.
இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மகாவம்சத்தின் படி இந்தத் தகவல் உறுதி ஆனது.
இது கி.பி 1017 ஆம் ஆண்டு தேதியிடப் பட்டது.
இலங்கையில் சோழர்களின் ஈடுபாடு கி.பி 907 முதல் 955 வரை ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழனின் ஆட்சியில் இருந்து ஆரம்பித்ததாகும்.
இருப்பினும், அத்தீவின் வடக்குப் பகுதிகளை இணைத்தவர் இராஜராஜர் தான்.
அங்கு சில பிரதேசங்கள் உள்ளூர் சிங்கள ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போதிலும், சோழர்களின் பிடி அங்கு படிப்படியாக இறுக்கமடைந்தது.
இராஜேந்திரனின் தாக்குதல் அவரது தந்தையின் தாக்குதலை விட மிகத் தீவிரமாக இருந்தது.
அவரது படைகள் ஐந்தாம் மஹிந்தாவைக் கைப்பற்றி, அவரது கிரீடம் உட்பட அரச உடைமைகளைக் கைப்பற்றின.
அந்தத் தீவின் மீதான அவரது கட்டுப்பாடு, அதை ஒரு முழுமையான சோழ மாகாணமாக மாற்றும் அளவுக்கு விரிவானதாக இருந்தது.
இராஜேந்திரனைக் குறிக்கும் திருமன்னி வளரன் என்ற பட்டப் பெயரைக் கொண்ட கல்வெட்டுகள் இலங்கையின் பொலன்னருவா அருகே காணப்பட்டன.
சிவன் மற்றும் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தமிழ் சோழக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோயில்கள், சோழர்களின் செல்வாக்கை அங்கு மேலும் குறிப்பிட்டுக் காட்டின.
இப்படையெடுப்பிற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி 1029 ஆம் ஆண்டில், ஒரு புதிய கிளர்ச்சி அங்கு வெடித்தது.
இரகசியமாக வளர்க்கப்பட்ட ஐந்தாம் மஹிந்தாவின் மகன் கசபா, அங்கு ஒரு வெற்றி கரமான கிளர்ச்சியை முன்னேடுத்து மேற்கொண்டார்.
ஆறு மாத மோதலுக்குப் பிறகு, அவர் மீண்டும் அரசக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, முதலாம் விக்கம்பாகுவாக ஆட்சி செய்து, சிங்கள இறையாண்மையை மீண்டும் நிறுவினார்.
ஆனால் இராஜேந்திரனின் ஏகாதிபத்தியம் இலங்கையுடன் நிற்க வில்லை.
கி.பி 1025 ஆம் ஆண்டில், கங்கைக்கு அவர் மேற்கொண்ட படையெடுப்பிற்குப் பிறகு, அவர் தனது பார்வையை கிழக்கு நோக்கி ஒரு செழிப்பான கடல்சார் இராட்சியமான ஸ்ரீவிஜயத்தை நோக்கித் திருப்பினார்.
இந்த தென்கிழக்கு ஆசியப் பேரரசு இந்தியாவை சீனாவுடன் இணைக்கும் முக்கியக் கடல் பாதைகளைக் கட்டுப்படுத்தியதோடு மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் ஜாவா உள்ளிட்ட பிரதேசங்களை ஆட்சி செய்தது.
ஆரம்பத்தில், சோழர்களுக்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் இடையிலான உறவுகள் சுமூகமாக இருந்தன.
சூடாமணி விகாரைக் கட்டுவதற்காக வேண்டி இராஜராஜ சோழன் நாகப்பட்டினத்தில் சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த மார விஜயோத்துங்கவர்மனுக்கு நிலம் வழங்கினார்.
இந்த இரண்டு இராஜ்ஜியங்களுக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திரப் பணிகள் தொடர்ந்து நடந்தன.
ஸ்ரீவிஜயர் கி.பி 1003 மற்றும் 1008 ஆகிய ஆண்டுகளில் தூதர்களை அனுப்பினார், அதே நேரத்தில் சோழர்கள் கி.பி 1015, 1033 மற்றும் 1077 ஆகிய ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
திருவாலங்காடு செப்புத் தகடுகளில் உள்ள கல்வெட்டுகள் கடாரத்தைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிடுகின்றன.
ஒரு தமிழ் பிரசாஸ்தி (ஒரு ஆட்சியாளரைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு) இன்னும் சில விவரங்களை வழங்குகிறது.
ஒரு கூற்று, சோழர்களின் கடல்சார் வர்த்தகத்தில் ஸ்ரீவிஜயரின் தலையீட்டால் இந்த மோதல் ஏற்பட்டது என்று கூறுகிறது.
மற்றொரு கூற்று, கடல்சார் மேலாதிக்கத்தை அடைவதற்கும் வெளிநாட்டுக் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குமான இராஜேந்திரரின் பரந்த இலட்சியத்தின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கிறது.
இராஜேந்திரரின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பு விரைவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.
சோழக் கப்பல்கள் வங்காள விரிகுடாவைக் கடந்து ஸ்ரீவிஜய சக்தியின் மையத்தில் தாக்கின.
சோழர்கள் கடல் கடந்து வலிமை பெறுவார்கள் என்று படையெடுப்பு மேற் கொள்ளப் பட்டாலும், கைப்பற்றப்பட்டப் பிரதேசங்களில் நேரடி ஆட்சியை நிறுவ உடனடி முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.
இராஜேந்திரனின் வாரிசான முதலாம் வீர ராஜேந்திரன், கடாரத்தை மீண்டும் கைப்பற்றி அதன் ஆட்சியாளரை மீண்டும் அமர்த்தக் கூறினார் என்ற நிலையில் இது முந்தைய வெற்றிகள் தற்காலிகமானவை என்பதைக் குறிக்கிறது.
சுமத்ராவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கி.பி 1088 தேதியிட்ட ஒரு தமிழ் கல்வெட்டு, இப்பகுதியில் சோழர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு மேலும் சான்றுகளை வழங்குகிறது.
இது குறைந்தபட்சம் வணிக ரீதியாக இருந்தது.
இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், இந்தப் பயணங்கள் சோழப் பேரரசின் பரந்த இராஜதந்திர வரம்பை எடுத்துக்காட்டுகின்றன.
கரந்தை செப்புத் தகடுகளில் உள்ள கல்வெட்டுகள், காம்போஜ மன்னர் (முதலாம் சூரியவர்மன் ஆட்சி செய்த அங்கோர் இராட்சியம்) இராஜேந்திரனுக்கு ஒரு வெற்றி கரமான போர் ரதத்தை அனுப்பி, அதன் மூலம் அவர் தனது எதிரி நாட்டுப் படைகளைத் தோற்கடித்ததை சுட்டிக் காட்டியது.
இராஜேந்திரனின் கடற்படைப் பயணங்கள் வரலாற்றில் ஒரு துணிச்சலான அத்தியாயத்தைக் குறித்தன.
அவை சோழப் பேரரசின் அரசியல் மற்றும் கலாச்சார வரம்பை இந்தியத் துணைக் கண்டத்திற்கு அப்பால் நீட்டித்தன.