முதலாம் விக்ரமாதித்யன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு
May 6 , 2025 15 days 101 0
கர்நாடகாவின் தாவங்கேர் மாவட்டத்தில் உள்ள நியாமதி தாலுக்காவில் உள்ள மாட புரா என்ற ஏரியில் பதாமி சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த முதலாம் விக்ரமாதித்யன் காலத்தைச் சேர்ந்த ஓர் அரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தோராயமாக ஐந்து அடி நீளம் கொண்ட இந்தக் கல்வெட்டு ஆனது, பழைய கன்னட எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட 17 வரிகளைக் கொண்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு ஆனது கி.பி 7 ஆம் நூற்றாண்டை, குறிப்பாக கி.பி. 654 முதல் 681 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த பதாமி சாளுக்கியர்களின் மன்னனான முதலாம் விக்ரமாதித்யனின் ஆட்சிக் காலத்தினைச் சேர்ந்தது.
பல்லாவி பகுதியை ஆட்சி செய்த முதலாம் விக்ரமாதித்யனின் அரசு அதிகாரியான சிங்கவென்னா உள்ளூர் கிராமவாசிகள் மீது சில வரிகளைத் தள்ளுபடி செய்ததை இந்தக் கல்வெட்டு விவரிக்கிறது.