TNPSC Thervupettagam

முதலாவது இந்திய நீர்வழிச் சரக்குப் போக்குவரத்து

July 16 , 2019 2127 days 708 0
  • முதன்முறையாக, பூட்டான் மற்றும் வங்க தேசம் ஆகியவற்றிற்கிடையே சரக்குப் போக்குவரத்திற்காக இந்திய நீர்வழிப் பாதை பயன்படுத்தப் படுகின்றது.
  • எம்வி ஏஏஐ (MV - AAI) என்ற கப்பல் அசாமின் துப்ரியிலிருந்துப் பயணத்தைத் தொடங்கி பிரம்மபுத்திரா மற்றும் இந்தியா – வங்கதேச ஒழுங்குமுறைப் பாதை வழியாக நாராயணகஞ்ச்சை அடையவிருக்கின்றது.
  • இது கற்களை வங்க தேசத்தில் கொடுப்பதற்காக அவற்றை பூட்டானிலிருந்து எடுத்துப் பயணத்தை மேற்கொண்டது.
  • இந்த நீர்வழிப் பாதையானது பயண நேரத்தை 8 முதல் 10 நாட்களாக குறைக்கவிருக்கின்றது. மேலும் இது போக்குவரத்துச் செலவையும் 30 சதவிகிதம் அளவிற்குக் குறைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்