சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் முதலாவது புத்தாக்கக் குறியீட்டில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் புத்தாக்கங்களில் முதல் ஐந்து இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குறியீடானது நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் ஆகியோரால் வெளியிடப் பட்டுள்ளது.
இது உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டின் (Global Innovation Index - GII) வரிசையில் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தக் குறியீடானது பின்வருவனவற்றின் அடிப்படையில் மாநிலங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
அவர்களின் கண்டுபிடிப்புத் திறன்,
மாநிலங்களுக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்,
புதுமைகளை ஏற்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள்.
மாநிலங்களின் செயல்பாடுகள்
வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடங்களில் உள்ளன.
ஒன்றியப் பிரதேசங்களில் தில்லி, சண்டிகர் மற்றும் கோவா ஆகியவை முதலிடங்களில் உள்ளன.
சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை இந்தக் குறியீட்டில் கடைசி இடங்களில் உள்ளன.