TNPSC Thervupettagam

முதலாவது இந்திய மனித மூளை வரைபடம்

October 30 , 2019 2071 days 913 0
  • ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதலாவது இந்திய மனித மூளை வரைபடத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
  • மேற்கத்திய மற்றும் மற்ற கிழக்கத்திய மக்ள் தொகையோடு ஒப்பிடப் படும் போது சராசரியாக இந்திய மனித மூளையானது உயரம், அகலம் மற்றும் கொள்ளளவு ஆகியவற்றில் சிறியதாக இருக்கின்றது என்று இந்த ஆராய்ச்சி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த வரைபடம் அல்சைமர் மற்றும் இதர மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளைப் பற்றிய முன்கூட்டிய ஆய்வுறுத்தலில் உதவிடும்.
  • மேலும் இது இந்தியர்களுக்கான சிறந்த காந்த அதிர்வு அலை வரைவு (MRI- Magnetic resonance imaging) பகுப்பாய்விலும் உதவிடும்.
  • இதற்கு முன்பு, இந்தியர்களின் MRI புகைப்படங்கள் காகசீயர்கள் (ஐரோப்பியர்கள்), சீனர்கள் அல்லது கொரியர்களின் மூளையின் புகைப்படங்களோடு ஒப்பிடப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்