முதலாவது கஞ்சா மருத்துவத் திட்டம்
September 12 , 2020
1717 days
823
- முதலாவது கஞ்சா மருத்துவத் திட்டமானது கனடாவுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட உள்ளது.
- இந்த ஒன்றியப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் முதலாவது அயல்நாட்டு முதலீடு இதுவாகும்.
- இந்தத் திட்டமானது ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தில் அமைக்கப்பட உள்ளது.
- கஞ்சா செடியிலிருந்து மருந்துகளை மேம்படுத்துவதில் நாட்டில் உள்ள முதலாவது மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஆகும்.
- போதை மருந்துகள் மீதான 1961 ஆம் ஆண்டின் ஒற்றை ஒப்பந்தமானது (சர்வதேச ஒப்பந்தம்) கஞ்சாவை ஒரு “கடுமையான மருந்தாக” வகைப்படுத்தியுள்ளது.
Post Views:
823