முதலாவது சர்வதேச கூட்டுறவுக் கண்காட்சி @ புது தில்லி
October 12 , 2019 2124 days 807 0
முதலாவது ‘இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சியானது’ புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியானது கூட்டுறவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய தளமாக விளங்கும். இது மேம்பட்ட கிராமப்புற மற்றும் பண்ணைகள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
இந்த கண்காட்சியில் 35 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளும் 150க்கும் மேற்பட்ட இந்தியக் கூட்டுறவு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
மேலும் மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் “யுவ சஹாகர்” என்ற 2019 ஆம் ஆண்டின் கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.