இந்தியாவின் முதலாவது தனியார் ரயிலான தில்லி - லக்னோ தேஜாஸ் விரைவு ரயிலானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் இயங்க விருக்கின்றது.
இது இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தினால் (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) முழுவதுமாக இயக்கப்படும் இந்திய ரயில்வேயின் முதலாவது ரயிலாகும்.
முதன்முறையாக, ரயில் பெட்டிகளின் நுழைவு வாயில்களிலேயே கட்டணம் செலுத்தி எடைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் விநியோகச் சேவை ஆகியவை இதில் அறிமுகப்படுத்தப் படுகின்றது.
இந்த ரயிலுக்கு முன்பதிவு மையங்களில் தட்கல் பயணச் சீட்டுகள் மற்றும் சாதாரண பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதில்லை.
இந்த ரயில்களில் சலுகைகள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது பயணித்தல் ஆகியவை அனுமதிக்கப்படாது.