TNPSC Thervupettagam

முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டம் 2026

October 16 , 2026 6 days 78 0
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (பிம்ஸ்டெக்) முதலாவது உள்துறை அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆம் ஆண்டிற்கான டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதோடு புதுடெல்லியில் நிறைவடைந்தது.
  • பிம்ஸ்டெக் அமைப்பில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்த பிரகடனமானது பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி, பண மோசடி, இணைய மோசடி, ஆள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
  • இது வலுவான புலனாய்வுத் தகவல்களைப் பகிர்தல், பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது மற்றும் நாடுகடத்தல் உள்ளிட்ட சட்டப்பூர்வ ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கிறது.
  • இது பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் (UNODC), INTERPOL, நிதி நடவடிக்கை அதிரடிப்படை (FATF) மற்றும் பண மோசடிக்கான ஆசியா/பசிபிக் குழு (APG) ஆகியவற்றுடனான ஒத்துழைப்பை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்