முதலாவது பொதுத் தகவல் தளம் – ராஜஸ்தான்
September 15 , 2019
2073 days
704
- ஒரு முன்னோடி நடவடிக்கையாக, ராஜஸ்தானில் “ஜன் சோச்னா” எனப்படும் முதலாவது பொதுத் தகவல் தளம் ஒன்று தொடங்கப்பட்டது.
- இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4 (2) உடன் (தகவல்களை திறனுடன் வெளிப்படுத்துதல்) இணங்கிப் பொருந்துகின்றது.
- இந்தப் பிரிவின் படி, இந்தத் தளமானது அரசு அதிகாரிகள் மற்றும் துறைகள் பற்றிய தகவல்களைத் தானாகவே பொதுமக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கின்றது.
- இது ஆரம்பத்தில் 13 துறைகள் தொடர்பான தகவல்களை வழங்கும்.
- 1990களில் தகவல் அறியும் உரிமை இயக்கத்தைத் தொடங்கிய ராஜஸ்தானுக்கு இந்தத் தளமானது மற்றொரு தனித்துவத்தைக் கொண்டு வருகின்றது.
Post Views:
704