ஜார்க்கண்ட் மாநில அரசானது முதன்முறையாக முடிவுகள் அடிப்படையிலான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில், அனைத்துத் துறைகளுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டிய குறிப்பிடத்தக்க இலக்குகளும் பொறுப்புகளும் வழங்கப் பட்டுள்ளன.
இந்த இலக்குகளை அடைய எடுக்கப் பட்ட முடிவுகள் 2022 ஆம் நிதியாண்டின் முடிவில் மதிப்பிடப் படும்.
இந்த முறையில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தலானது 2007-08 ஆம் நிதிநிலை அறிக்கையிலிருந்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையின் கீழ், ஒவ்வொரு துறையைக் கையாளும் ஒவ்வொரு அமைச்சகமும் முதல்நிலை முடிவுகள் அடிப்படையிலான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிதிநிலை அறிக்கையானது நிதிநிலை அறிக்கையின் (பட்ஜெட்) செலவினம், முடிவுகள் மற்றும் விளைவுகள் ஆகியவற்றிற்கிடையே ஒருங்கிணைப்புத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றது.