TNPSC Thervupettagam

முதலாவது யோகாசன சாம்பியன்ஷிப்

June 9 , 2026 4 days 99 0
  • அகமதாபாத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட யோகாசன விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர்.
  • யோகாசனத்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போட்டி விளையாட்டாக மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச யோகா தினத்திற்கு முன்னதாக இந்நிகழ்வு நடைபெற்றது.
  • காமன்வெல்த் விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் போன்ற எதிர்கால சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் யோகாசனத்தைச் சேர்ப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்