TNPSC Thervupettagam

முதலாவது வேளாண் ஏற்றுமதி கொள்கை - 2018

December 16 , 2018 2425 days 891 0
  • 2022 ஆம் ஆண்டளவில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் முதலாவது வேளாண் ஏற்றுமதி கொள்கை – 2018 என்ற கொள்கைக்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேலும் இது வேளாண் ஏற்றுமதி கொள்கையை அமல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதற்காக வர்த்தக அமைச்சகத்தை முதன்மை துறையாகக் கொண்ட கண்காணிப்புக் கட்டமைப்பை மத்திய அளவில் நிறுவுவதற்கான திட்டதையும் அங்கீகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை 60 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதற்கான நோக்கமுடைய திட்டத்துடன் வர்த்தக அமைச்சகமானது இந்தியாவின் முதலாவது வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கியுள்ளது.
  • இந்த கொள்கையின்படி சேவைகளில் 12 சிறந்த துறைகளை மேம்படுத்துவதற்காக மொத்தமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கான பரிந்துரைகள் கீழ்க்காணும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • யுக்தி சார்ந்த துறை
  • செயல்பாட்டுத் துறை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்