முதலையின் மூதாதையர் மாதிரிகள் சிலியில் கண்டெடுப்பு
July 29 , 2021 1397 days 701 0
அர்ஜென்டினா நாட்டின் இயற்கை அறிவியல் அருங்காட்சியகமானது தென் சிலி நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைப்படிம எலும்புக் கூடானது நவீனகால முதலையின் ஒரு மூதாதையராக இருக்கலாம் என்று கணித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இனத்திற்கு புர்கெசுசஸ் மல்லிங்க்ரான்டென்சிஸ் (Burkesuchus mallingrandensis) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இது 2014 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.
இவை நன்னீரில் வாழத் தொடங்கிய முதல் இனம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.