BIMReN என்பது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு-இந்திய கடல்சார் ஆராய்ச்சி வலையமைப்பு என்பதைக் குறிக்கிறது.
இதன் முதல் மாநாடு கொச்சியில் நடைபெற்றது.
BIMReN, BIMSTEC நாடுகளிடையே கூட்டுக் கடல் சார் ஆராய்ச்சி, நிலையான மீன்வளம் மற்றும் கடல் சார் பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்குவிக்கிறது.
இந்த முன்னெடுப்பானது, 2022 ஆம் ஆண்டு கொழும்பு BIMSTEC உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் (MEA) தொடங்கப்பட்டது.
கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது ஆரோக்கியம், பெருங்கடல் கண்காணிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த கடல் சார் புத்தாக்கம் மற்றும் நிலையான கடல் ஆளுகையில் இளைஞர்களின் ஈடுபாடு ஆகியவை இதில் கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும்.