TNPSC Thervupettagam

முதல் BRICS சுகாதார செயற்குழு கூட்டம் 2026

April 18 , 2026 15 hrs 0 min 67 0
  • உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக முதல் BRICS சுகாதார செயற்குழு கூட்டத்தை இந்தியா புது தில்லியில் நடத்தியது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) கட்டமைப்பின் கீழ் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
  • மக்களை மையப்படுத்திய சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் வகையில், “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்பது இதன் கருத்துருவாக இருந்தது.
  • பெருந்தொற்றுத் தயார்நிலை, சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற புதிய கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை இந்தியா அறிமுகப் படுத்தியது.
  • காசநோய் (TB) ஆராய்ச்சி, டிஜிட்டல் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான அணுகல் ஆகியவை முக்கியப் பகுதிகளில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்