இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது இந்தியாவில் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃபோட்டானிக் ரேடாரை உருவாக்கியுள்ளது.
இந்த ரேடார் வழக்கமான ரேடியோ அலைகளுக்குப் பதிலாக லேசர்கள் மற்றும் ஃபோட்டானிக் ஒருங்கிணைந்தச் சுற்றுகள் (PICs) போன்ற ஒளி சார்ந்த கூறுகளைப் பயன்படுத்துகிறது.
இது சுமார் 11 ஜிகாஹெர்ட்ஸ் (GHz) அலைவரிசையில் இயங்குவதால், இது ரேடாருக்குப் புலப்படாத விமானங்கள் மற்றும் சிறிய ஆளில்லா விமானங்களைக் கண்டறிய வழி வகுக்கிறது.
இந்த அமைப்பானது சுமார் 1.3 சென்டிமீட்டர் உயர் தெளிவுத் திறனைக் கொண்டு உள்ளதால், ஆளில்லா விமானங்களின் இறக்கைகள் போன்ற சிறிய பகுதிகளைக் கூட கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.
இதன் ஒளியிழை சார்ந்த சமிக்ஞை செயலாக்கம் ஆனது மின்னணு நெரிசல் மற்றும் தவறான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றிக்கு இயல்பாகவே எதிர் திறனைக் கொண்டு உள்ளது.
இந்த ரேடார் சிறியதாகவும், ஆற்றல் திறன் கொண்டதாகவும் உள்ளதால், Su-30MKI, தேஜாஸ், ரஃபேல் ஜெட் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் சில வான்வழிப் பாதுகாப்புப் பிரிவுகள் போன்ற தளங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.