முதல் அட்லாண்டிக் கடல் தாண்டிய எந்திரம் மூலமான பக்கவாத அறுவை சிகிச்சை
November 15 , 2025 13 hrs 0 min 14 0
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர், 4,000 மைல்கள் தொலைவில் அமெரிக்காவில் ஒரு நோயாளியின் உடலில் எந்திரம் மூலமான இரத்தக் கட்டி அகற்றல் அறுவை சிகிச்சையை (த்ரோம்பெக்டோமி) மேற்கொண்டார்.
பக்கவாதத்திற்குப் பிறகு இரத்தக் கட்டிகளை அகற்றுவதற்கான குறைந்தபட்ச சாதன ஊடுருவும் செயல்முறையான த்ரோம்பெக்டோமி செய்யப்பட்டது.
இந்த அமைப்பு ஆனது அறுவை சிகிச்சை நிபுணரை நேரடி எக்ஸ்ரே படங்களை நிகழ் நேரத்தில் கண்காணித்து, வேறொரு இடத்தில் இருந்து செயல்பட அனுமதித்தது.
இந்தச் செயல்முறை Nvidia மற்றும் Ericsson நிறுவனத்தின் இணைப்பு ஆதரவுடன் Sentante என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு எந்திரத்தினை / ரோபோவைப் பயன்படுத்தியது.