TNPSC Thervupettagam

முதல் ஆளில்லா விண்கலம் – இஸ்ரோ

July 5 , 2021 1492 days 651 0
  • முதலாவது ஆளில்லா விண்கலமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், இரண்டாவது ஆளில்லா விண்கலமானது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் மற்றும் கடைசி ஆளில்லா விண்கலமானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் விண்ணில் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
  • ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இந்த தேதிகள் ஒத்தி வைக்கப் பட்டன.
  • விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதல் ஆளில்லா விண்கலமும் 2022-23 ஆம் ஆண்டில் இரண்டாவது ஆளில்லா விண்கலமும், அதைத் தொடர்ந்து மனித விண்வெளிப் பயணம் திட்டமிடப் பட்டுள்ளது.
  • இஸ்ரோவினுடைய அதிகன எடை சுமக்கும் ஏவுகலமான ஜிஎஸ்எல்வி MK-III என்ற ஏவுகலமானது இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • ககன்யான் எனப்படும் இந்த திட்டத்தின் வெற்றியுடன் சேர்த்து, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நான்காவது வெற்றி நாடாக இந்தியா உருப்பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்