TNPSC Thervupettagam

முதல் இந்திய – கொரியப் பூங்கா

April 4 , 2021 1503 days 828 0
  • டெல்லி இராணுவக் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இந்திய கொரிய நட்புறவுப் பூங்காவினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கொரியக் குடியரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் திரு. சூ வூக் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
  • இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய இராணுவம், டெல்லி இராணுவக் குடியிருப்பு வாரியம், கொரியத் தூதரகம் மற்றும் இந்திய கொரியப் போர் மூத்தப் படை வீரர்கள் சங்கம் ஆகியவற்றைக் கலந்தாலோசித்து இப்பூங்கா உருவாக்கப் பட்டு உள்ளது.
  • 1950 – 53 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கொரியப் போர்களில் பங்கேற்ற 21 நாடுகளில் இந்தியாவும் ஓர் அங்கமாகப் பணியாற்றியதை நினைவு கூறும் ஒரு நினைவுச் சின்னமாகவும் இப்பூங்கா திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்