இந்தியாவில் முதலாவது குரங்கு அம்மை நோய்ப் பாதிப்பானது கேரளாவில் பதிவாகி உள்ளது.
இந்த நோய்ப் பாதிப்புகளில் பெரும்பாலானவை ஐரோப்பிய பிராந்தியம் (86 சதவீதம்) மற்றும் அமெரிக்கா (11 சதவீதம்) ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் மூலமாக பரவக்கூடிய விலங்குவழி நோய்த் தொற்றாகும் (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்).
இதன் அறிகுறிகளானது கடந்த காலத்தில் பரவிக் கொண்டிருந்த பெரியம்மை நோயாளிகளிடம் காணப்பட்டதைப் போன்றதாகும்.
1980 ஆம் ஆண்டில் பெரியம்மை ஒழிப்பு மற்றும் பெரியம்மை தடுப்பூசி நிறுத்தப் பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோயானது பொது சுகாதாரத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கியமான ஆர்த்தோபாக்ஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸாக உருவெடுத்துள்ளது.