இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் குவாண்டம் வைர நுண்ணோக்கியை வெளியிட்டது என்பதோடு, இது பம்பாயின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் உள்ள பி-குவெஸ்ட் குழுவால் தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது.
இந்தச் சாதனம் வைரத்தில் காணப்படும் நைட்ரஜன் வெற்றிட மையங்களைப் பயன்படுத்தி நுண்ணிய அளவிலான முப்பரிமாண காந்தப்புல ஆய்வினை மேற் கொள்கிறது.
இந்த தொழில்நுட்பம் ஆனது நரம்பியல், பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் குறைக்கடத்தி சில்லுகளின் அழிவில்லாத மதிப்பீடு ஆகியவற்றில் இதன் பயன்பாடுகளை ஆதரிக்கிறது.
இந்த அமைப்பு முப்பரிமாணச் சில்லுகளின் கட்டமைப்புகள் உட்பட மேம்பட்ட மின்னணுச் சாதனங்களில் மறைந்த அடுக்குகளின் காந்தப்புல ஆய்வினை செயல் படுத்துகிறது.
இந்தத் திட்டமானது இந்தியாவிற்கு குவாண்டம் வைர நுண்ணோக்கித் துறையில் முதல் காப்புரிமையைப் பெற்றது.