முதல் சுற்றுச்சூழல் அமைப்பு செந்நிறப் பட்டியல் மதிப்பீடு – கேரளா
October 18 , 2026 4 days 70 0
கேரள மாநில பல்லுயிர் வாரியம் (KSBB) இந்தியாவின் முதல் மாநில அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளின் செந்நிறப் பட்டியல் மதிப்பீட்டுத் (RLE) திட்டத்தை தொடங்கியுள்ளது.
அனைத்து 14 மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் அமைப்பு சரிவு அபாயங்களை மதிப்பிடுவதற்காக, கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் MES அஸ்மாபி கல்லூரி ஆகியவை கூட்டாக இந்த ஓராண்டு திட்டத்தை நடத்துகின்றன.
தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெப்பமண்டல நதிக்கரை பசுமை மாறாக் காடுகள் கடந்த நூற்றாண்டில் அவற்றின் பரப்பளவில் 83% ஐ இழந்துள்ளன என்பதோடு மேலும் இவை இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) அளவு கோல்களின் கீழ் மிக அருகிய (Critically Endangered) நிலையில் உள்ளதாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
இந்த மதிப்பீடு ஐந்து தரப்படுத்தப்பட்ட IUCN அளவுகோல்களைப் பயன்படுத்தி காடுகள், ஆறுகள், மிரிஸ்டிகா சதுப்பு நிலங்கள், சோலை-புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கடலோர சதுப்பு நிலங்களை உள்ளடக்கியது.
இத்திட்டம் அச்சுறுத்தல்களை அடையாளம் காணும், சுற்றுச்சூழல் அமைப்பு மறு சீரமைப்பு மற்றும் காலநிலை தழுவலுக்கு வழிகாட்டும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.