நாட்டின் முதல் மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய திரவக் கண்ணாடி தொலை நோக்கி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேவஸ்தல் என்ற மலையில் அமைக்கப் பட்டுள்ளது.
மீயொளிர் விண் முகில்கள், ஈர்ப்புக் குவியங்கள், விண்வெளிக் குப்பைகள் மற்றும் குறுங்கோள்கள் போன்ற நிலையற்ற அல்லது மாறக் கூடியப் பொருள்களை அடையாளம் காண்பதற்காக இது வானில் தற்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்தியத் திரவக் கண்ணாடி தொலைநோக்கி (ILMT) வானத்தை ஆய்வு செய்ய உதவும்.
இது அண்டங்கள் மற்றும் பிற வானியல் வளங்களைக்கண்காணிப்பதைச் சாத்தியம் ஆக்குகிறது.