இந்திய வானிலை ஆய்வு மையமானது, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலப் பகுதியில் தென்மேற்குப் பருவக் காலத்தின் மழைப் பொழிவிற்கான ஒரு நீண்ட கால முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு மழைப்பொழிவானது இயல்பாக இருக்கும் என்றும் இந்த மதிப்பீட்டில் கூறப் பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னறிவிப்பின்படி, நீண்ட கால சராசரி மதிப்பீட்டில் (LPA) தென்மேற்குப் பருவமழை 96 முதல் 104 சதவீதம் வரை இயல்பானதாக இருக்கும்.