TNPSC Thervupettagam

முதல் பனிச்சிறுத்தை இரவுநேர வனவிலங்கு உலா - லடாக்

October 10 , 2026 12 hrs 0 min 30 0
  • லடாக் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா லடாக்கில் பனிச்சிறுத்தை தடங்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதல் உயரமான பகுதியின் இரவுநேர வனவிலங்கு உலாவினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • ஒன்றியப் பிரதேசத்தின் வனத்துறையுடன் இணைந்து பனிச்சிறுத்தை மற்றும் உயரமான இயற்கைப் பாதுகாப்புச் (SHAN) சங்கம் இந்த இரவுநேர வனவிலங்கு உலாவினை இயக்குகிறது.
  • இரவுநேர வனவிலங்கு உலா வழிகள் ஹெமிஸ் தேசியப் பூங்கா, சாங்தாங் மற்றும் காரகோரம் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றுடன் லடாக்கின் பிற பகுதிகளையும் உள்ளடக்கியது.
  • அறிக்கையின்படி, லடாக் 477 பனிச்சிறுத்தைகளின் தாயகமாக உள்ளது.
  • பனிச்சிறுத்தை (பான்தெரா உன்சியா) IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் (Vulnerable - VU) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • உள்ளூர் சமூகங்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கும் அதே வேளையில் வனவிலங்குப் பாதுகாப்பை ஆதரிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்