ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ், தமிழ்நாட்டின் முதல் இளஞ்சிவப்புநிற (பிங்க்) காவல் சாவடி பொன்னேரியில் திறக்கப்பட்டது.
இது 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியைச் சேர்ந்ததாக இருக்கும்.
சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதற்கும், அப்பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இளஞ்சிவப்புநிற காவல் சாவடி தொடங்கப் பட்டது.
இந்தச் சாவடியில் அறநெறி மற்றும் TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு புத்தகங்கள் அடங்கிய நூலகமும் உள்ளது.
ஒரு பாரம்பரிய காவல் நிலையத்திற்கு செல்வது தொடர்பான பயம் இல்லாமல், மாணவிகள் காவல்துறையை அணுகக்கூடிய வகையில் பெண்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.