ரெபேகா கிரின்ஸ்பான் (Rebecca Grynspan), 2021 ஆம் ஆண்டு முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு UNCTAD அமைப்பின் (ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பு) தலைவராகச் செயல்படுவார்.
இவர் இந்தப் பொறுப்பினை வகிக்கும் முதல் பெண்மணி மற்றும் மத்திய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இவர் கோஸ்டா ரிக்கா என்ற நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஆவார்.
இவர் டாக்டர் முகிஷா கித்தூயி என்பவரை அடுத்து இந்தப் பொறுப்பினை ஏற்று உள்ளார்.
கித்தூயி 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை UN வர்த்தக நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய முதல் கென்ய நாட்டவராவார்.