சென்னைப் பெருநகர மாநகராட்சி மன்றம் ஆனது 205.64 கோடி ரூபாயினைத் திரட்ட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி அளிக்கச் செய்வதற்காக அதன் முதல் பசுமை மாநகராட்சிப் பத்திரத்தை வெளியிட்டதன் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது.
மே 22 ஆம் தேதியன்று தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மாநகராட்சிப் பத்திரத்தை சென்னைப் பெருநகர மாநகராட்சி மன்றம் வெளியிட்டதாக தீர்மானம் கூறியது.
அது ஆண்டிற்கு 7.97% வட்டி விகிதத்தில் 100 கோடி ரூபாய் அடிப்படை அளவிற்கு எதிராக 421 கோடி ரூபாய் திரட்டியது.
பசுமைப் பத்திர வெளியீடு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரிய (SEBI) விதிமுறைகளைப் பின்பற்றும் என்று சென்னைப் பெருநகர மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
SEBI விதிமுறைகள் (வழிகாட்டல் குறிப்பு) ஆணையரை தலைவராகக் கொண்ட ஒரு பத்திர வெளியீட்டுக் குழுவை நிறுவ வேண்டும் என்று கோருகிறது.
இந்தப் பத்திரம் பருவநிலைப் பத்திரங்கள் தரநிலை மற்றும் சான்றிதழ் திட்டம் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தை சங்கத்தினால் வெளியிடப்பட்ட பசுமைப் பத்திரக் கொள்கைகள் போன்ற சர்வதேசக் கட்டமைப்புகளுக்கு இணங்கும்.
இது ஒரு 'பசுமைப் பத்திரம்' என்பதால், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர மாநகராட்சி மன்றம் 20 கோடி ரூபாய் வரையில் ஊக்கத் தொகையாகப் பெறத் தகுதியுடையது.
இந்தத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் ஒவ்வொரு 100 கோடி ரூபாய்க்கும் அதிக பட்சமாக 20 கோடி ரூபாய் வரையில் 10 கோடி ரூபாய் ஊக்கத் தொகையைப் பெறவும் தகுதியுடையது.
இந்தப் பத்திரத்திலிருந்து கிடைக்கும் வருமானம் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உள்ள உயிரிச் சுரங்கத் திட்டத்திற்குப் பகுதி நிதியாகப் பயன்படுத்தப்படும்.
இந்தப் பத்திரத்தின் மூலம் 205.64 கோடி ரூபாய் திரட்டப் பட்டது என்ற நிலையில் இதில் ஜெர்மனி நாட்டு வங்கியான KfW மூலம் 180 கோடி ரூபாய் திரட்டப் பட்டதுடன் அதில் சென்னைப் பெருநகர மாநகராட்சி மன்றத்தின் மொத்தப் பங்களிப்பு 385.64 கோடி ரூபாய் ஆகும்.